Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மண்டல பொதுக்குழு கூட்டம். 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0

சட்டமன்றத்தில் ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது . திருச்சியில் ஜவாஹிருல்லாஹ் பேட்டி.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தியில் நடைப்பெற்றது.

அந்த கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்
திருச்சி,புதுக்கோட்டை, பெரம்பலூர்,கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லாஹ்,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏழு மண்டலங்களாக பிரித்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாக உள்ளது

கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயக உயர்ந்துள்ளது. கோடிஸ்வரர்களுக்கு இந்தியாவை விற்பனை செய்யும் வகையிலையே பட்ஜெட் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி வேலை உறுதி வாய்ப்பு திட்டம் குறித்து சரியான அறிவிப்பு இல்லை,வேலைவாய்ப்பை அளிக்கும் பட்ஜெட்டாக இல்லை.

எட்டு வழி சாலை திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ள நிலையில் அதை செயல்படுத்துவோம் என மத்திய அரசு கூறி உள்ளது. இது மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் முதலாளிகளுக்கான பட்ஜெட்டாகவே உள்ளது.

பா.ஜ.க வை சேர்ந்த கல்யாண ராமன்
முகமது நபியை விமர்சித்து பேசி இருப்பது தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசி இருப்பதாகவே இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறு பேசி வரும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.குறிப்பாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் ஆளுநர் அது குறித்து எதுவும் பேசாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

தி.மு.க கூட்டணியில் கடந்த தேர்தலை விட மனித நேய மக்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

திராவிட இயக்கத்தால் பண்பட்ட பூமி தமிழ்நாடு ஆனால் தற்போது அ.தி.மு.க மாநில உரிமைகளை பறிபோக செய்துள்ளது.மாநில உரிமைகளை மீட்க வேண்டும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் எங்களின் தேர்தல் பரப்புரை இருக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.