திருச்சி புறநகர் வடக்கு
மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள்,
சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு நலத்துறை அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ் , பரமேஸ்வரி , முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், சிவபதி, பூனாட்சி, மாவட்ட இணை செயலாளர் இந்திரா காந்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் விஜய், மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1.
தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பெருநாளை மகிழ்ச்சியுடன்
கொண்டாடிட பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ .2500/-ரொக்கமும் வழங்கிய
தமிழக முதலமைச்சர் எடப்பாடியாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் 2.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தையும்,
உழைப்பையும் போற்றும்வண்ணம், எழிலுற அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை உலக
புகழ்பெற்றதாய் உருவாக்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடியார்
அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் 3.
வருகின்ற 27.01.2021 புதன்கிழமை சென்னையில்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு மண்டபத்தை தமிழக
முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கும் வரலாற்று
சிறப்புமிக்க நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக
ஆயிரக்காணக்கானவர்கள் திரளாக கலந்துகொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.