திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம்.
கழகத் தலைவர் தலைமையில் 21/01/2021 மாநில அளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏகமனதாக கரவொலிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது
இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகள் குறித்து மாவட்ட கழக பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசித்தார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட கழக ஆக்கப் பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், கவிஞர் சல்மா, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .