மேல கல்கண்டார் கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க. அரசு.
தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பேச்சு.
எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலகல்கண்டார் கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், தண்டபாணி, பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர்.
ஒன்றிய செயலாளர்கள் ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன் நிர்வாகிகள் ராஜ்மோகன், நெட்ஸ் இளங்கோ, பிஎச்இஎல் கார்த்தி, பவுன் டி.டி.கிருஷ்ணன்,வக்கீல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தலைமை கழக பேச்சாளர்கள் மனோஜ் குமார், அன்பழகன், பாஸ்கரன், சந்திரசேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார்கள் ஆனால் கருணாநிதி மட்டும்தான் அரசியல் வாரிசு முன்னிறுத்தி ஆட்சி நடத்தி வந்தார் அரசுகள்தான் பதவிக்கு வந்து திமுகவை அடிமை இயக்கமாக நடத்துகின்றனர்.
இன்றைக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நல்லாட்சி நடத்தி வருகிறார் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் மணப்பாறை, லால்குடிஆகிய மூன்று தொகுதிகளில் ரூ 48 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருவெறும்பூரில் ரூபாய் 12 கோடி செலவில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
எப்போதும் மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக அதிமுக இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.பாலன்,
ரீனா செந்தில், ராஜா, முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் என்.எஸ்.பி.ரவிசங்கர், வேல்முருகன்,தஞ்சாயி, பாஸ்கரன் மற்றும் ராஜப்பா, சிங்காரவேலுராஜா, சபாபதி, ஆர். பி.கணேசன்,தேசிங்கு ராஜா, நாகராஜா,ஆவின் பாஸ்கரன்,வேங்கூர் ரத்தினம், சாம்பு,தங்கமணி, நவல்பட்டு பாலமூர்த்தி, சத்ரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி தெற்குமாவட்ட அதிமுக சார்பில் கல்கண்டார் கோட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் குமார் வழங்கிய போது எடுத்த படம் அருகில் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பாஸ்கரன், தண்டபாணி, சாந்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.