திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகளிலும்
20.01.2021 முதல் 31.01.2021 வரை மெகா துப்புரவுப்பணி
மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம் அதிரடி நடவடிக்கை.
திருச்சிராப்பள¦ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் அதிக அளவு குப்பைகள் தேங்கியுள்ள இடங்களை தேர்வு செய்யப்பட்டு மெகா துப்புரவு பணி மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம்
அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி நான்கு கோட்ட உதவி ஆணையர்கள் முன்னிலையில் 20.01.2021 முதல் 31.01.2021 வரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் மெகா துப்புரவு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு கோட்ட அனைத்துப் பகுதிகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமையாகும். இதற்காக மாநகர மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து மாநகராட்சி மூலம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி சில இடங்களில் துப்புரவு பணியாளர்களின் பற்றாக்குறையால் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு வார்டிலும் 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப்பணி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் மெகா துப்புரவு பணிகளை 65 வார்டுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஒருங்கினைத்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகர மக்கள் நகரத்தை தூய்மையாக பராமரித்திட மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் டீ கப் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கான கப்கள் மற்றும் சிறிய அளவிலாக கேரி பைகள் சாக்கடைநீர் வடிகால்களையும், மழைநீர் வடிகால்களையும் அடைத்துக்கொள்வதுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி , சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றது.
இதனால், பொதுமக்கள் வேண்டுகோளின்படி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளையும் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான நகராக பராமரித்திட குப்பைகளை திறந்தவெளியில் கொட்டாமல் வீட்டுக்கு வீடு மாநகராட்சி குப்பை வாங்கும் வண்டிகளில் மட்டுமே கொடுக்கவேண்டும் என மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளளார்.