எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் அன்னதானம். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சரும்,கழக மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் அறிவுறுத்தலின்படியும், வெல்லமண்டி என். ஜவர்கலால் நேரு ஆலோசனையின்படியும்

சிந்தாமணி அண்ணாசிலை அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான நிகழ்ச்சியினை சுற்றுலாத்துறை அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் துவங்கி வைத்தார்.
அருகில் திருச்சி எம்ஜிஆர் இளைஞர் அணி மாநகர் மாவட்ட செயலாளர் சிந்தை முத்துகுமார், மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழரசி சுப்பையா ,பகுதி செயலாளர்கள் கருமண்டபம் ஞானசேகர், அன்பழகன், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.