திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் 11வது மாநில மாநாடு பிப்ரவரி மாதம் நடைபெறு உள்ளது.
அதற்கான பணிகள் இன்று காலை துவக்கப்பட்டது.
கடந்த 1996, 2006, 2014லில் நடைபெற்ற மாநில மாநாட்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் கழகத்தின் 11வது மாநில மாநாடு திமுக அறிவித்துள்ளதை தொடர்ந்து திமுகவின் 11வது மாநில மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி – சென்னை ரோட்டில் சிறுகனூர் பகுதில் 300 ஏக்கரில் உள்ள இடத்தினை அமைச்சர் கே. என். நேரு தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த மாநாட்டின் ஆயத்தப் பணிகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு இன்று 18.01.2021துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி செளந்திரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துறைராஜ், வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த இடத்தினை நாளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட உள்ளதாக தெரிகிறது.
மேலும் மாநாட்டிற்கான தேதியும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என கூறப்படுகிறது.