திருச்சியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட பள்ளித் தோழர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்.
திருச்சி ஆர்.சி. மாதிரி பள்ளி மற்றும் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்த நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி ஆர்.சி பள்ளி அருகே, தனியார் அரங்கில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல், கண்டுகளிப்பு நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இளம் சிறார்களாக பள்ளி காலத்தில் வளம் வந்தவர்கள் இன்று, 22 வருடங்களுக்குப் பிறகு முதுமையுடன், தலை நரைத்து, மாறிய முகங்களுடன், மாறாத புன்னகையுடன் சந்தித்துக்கொண்ட மகிழ்ச்சியான தருணம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி கொண்டு, தங்களது பள்ளி கால பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, தற்போது அவர்கள் கல்வியாளர்களாக, மருத்துவர்களாக, காவல்துறையினராக, பல்வேறு அரசு துறைகள், கணினி துறை, கட்டட கலை, ரியல் எஸ்டேட் துறையிலும் சிறப்பாக பணியாற்றி, தனித்துவமான தடம் பதித்து வருவதை குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்.
பல்வேறு ஆக்கபூர்வமான, பல நலத்திட்டங்களை சமுதாயத்திற்கு ஆற்றுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர்.