திருவெறும்பூர் தொகுதியில் மழையால் பல ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு !
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, நேரில் சென்று பாார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் பத்தாளப்பேட்டை, கிளியூர், குவலக்குடி, கிராமத்தில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அறிந்த திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான, ன அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முன்னரே வலியுறுத்தியுள்ளதை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
பெய்து வரும் கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை எனவும் உடனடியாக அதிகாரிகள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனவும் ஏக்கருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினரிடம் விடுத்தனர்.
நிகழ்வின் இந்நிகழ்வின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, சேர்மன் சத்யாகோவிந்தராஜ் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.