பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் மது விற்பனை என்பது இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால் கடந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறை காரணமாக ரூ.750 கோடி மது விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.417 கோடிக்கு மது விற்கபட்டுள்ளது.
குடிமகன்கள் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இதில் நேற்று முன்தினம் போகிப்பண்டிகை அன்று 147.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
இதில் திருச்சி மண்டலம் மது விற்பனையில் நேற்று முன்தினம் முதல் இடம் பிடித்த நிலையில்,
பொங்கல் பண்டிகையான நேற்று தமிழகத்தில் 269.43 கோடிக்கு மது விற்கபட்ட நிலையில்
திருச்சி மண்டலத்தில் 56.39 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
இதிலும் திருச்சி மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.