திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை
அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பாக
முசிறி அண்ணாசிலை அருகில் 13.01.2021 நாளை புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதுசமயம் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.