இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்,
கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.