திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசுகாலனி 3-வது கிராஸில் தற்போதைய நிலை.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
கடந்த முறை பெய்த மழைக்கு திருச்சி மாநகராட்சியிடம் முறையிட்டதால் ஒரே ஒரு லோடு மண்னை அடித்தார்கள் ( தற்காலிக நடவடிக்கையாக)
,தற்போது பெய்த மழைக்கு மறுபடியும் சேறும் சகதியுமாக மாறியது. அரசு காலனி.
நேற்று முழுவதும் பெய்த மழையினால் தேங்கிய மழை நீர் பாசி பிடித்து குடியிருப்புக்குள் செல்லும் அளவுக்கு தேங்கி உள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு கிடைப்பதற்கு பொதுமக்கள் முறையிட்டு கொண்டுதான் இருக்கின்றனர் ஆனாலும் இதற்கு ஒரு தீர்வு இன்றுவரை எட்டப்படவில்லை.
இந்தக் குடியிருப்புப் பகுதியில் வயது முதிர்ந்தோர் மற்றும் குழந்தைகளும் பெண்களும் அதிகமாக வசிப்பதால் அவர்களுக்கு ஏதும் நோய் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளார்கள்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அரசு காலனி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.