திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வரவேற்றார். இதில் திருச்சி தஞ்சை திருமண்டல மறை மாவட்ட தலைவர் எம். கே. ராசையா, கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை தலைவர் ஜான் ராஜ்குமார், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் உஸ்மான், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் பிலோமி ஆகியோர் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.