திருச்சியில் தமிழ்நாடு அனைத்து ஆவின் ஓட்டுநர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சட்ட ஆலோசகர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது,
இதில் தலைவர் சரவணகுமார் ,பொது செயலாளர் மணிகண்டன், ,பொருளாளர் முத்து கிருஷ்ணன் ,உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர் .
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் ஓட்டுநர் களையும் சங்கத்தில் இணைப்பது மற்றும் சங்கத்தை பதிவு செய்வது இருபது வருடங்களாக பட்டதாரியாக இருந்து ஓட்டுனராக இருந்தால் அவர்கள் தகுதிக்கேற்ப புரோமோஷன் வழங்குவது, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.