திருச்சி மாவட்ட ஹயர் கூட்ஸ் 8ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.
திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் தாஸ் தலைமையிலும், மாவட்ட செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் அன்வர் பாஷா, மாவட்ட செயலாளர் டி.எம்.ஐ ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்ந்து ஆறு, ஏழு மாதங்களாக தொழில் வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டனர்.
அவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்திற்கு சிறப்பு நிவாரண நிதி வழங்கி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என்றும்,
மேலும் கொரோணா காலத்தில் தொழில் வாய்ப்பை இழந்து, இத்தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு எளிதாக வங்கி கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஆவன செய்திட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேலும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் பலரும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நேரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்பத்திற்கு ரூ.2500 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள் வழங்கிய தமிழக அரசுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஹயர் கூட்ஸ் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% சதவிகித ஜிஎஸ்டி வரியை 12% ஆக குறைக்க தமிழக அரசு ஆவன செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.