“திருச்சி மாநகராட்சி இழந்த சிறுவனின் உயிரை மீட்டு கொடுக்குமா….? மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி.
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்திருக்கலாகாது பாப்பா என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் அனைத்து பள்ளி பாடத்திலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் திருச்சி மாநகராட்சியின் பொறுப்பற்ற, நிர்வாக திறமை இல்லாத செயலால் வீட்டு அருகில் விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது குழந்தை யஸ்வந்த் மூடப்படாத ஐந்து அடி சாக்கடையில் விழுந்து தனது இன்னுயிரை இழந்துள்ளது வேதனையிலும் வேதனை.
வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை திருச்சியில். எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்களும், பழுதடைந்த மிக மோசமான சாலைகள் ஒருபுறம் என்றால், ஆழமான சாக்கடைகளை மூடிபோட்டு முறையாக திருச்சி மாநகராட்சி பராமரிக்காததால் ஐந்து அடி ஆளமான சாக்கடையில் விழுந்து குழந்தை தனது இன்னுயிரை இழந்துள்ளார்.
#இந்த பொறுப்பற்ற செயலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகளை சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து திருச்சி மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
என மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர்
S.R.கிஷோர்குமார்,
கேட்டுள்ளார்.