கைய பிடித்து இழுத்தா காவலரை செருப்பால் அடித்த இளம்பெண்: வீடியோ காட்சி
கைய பிடித்து இழுத்தா காவலரை செருப்பால் அடித்த இளம்பெண்: வீடியோ காட்சி
சென்னை வடபழனி 100 அடி சாலையில் அம்பிகா எம்பயர் ஹோட்டல் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் பஸ்சுக்காக காத்து நின்றார். அந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் அவர் பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த
சென்னை கே.கே.நகர் நிலைய காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜீவ் என்ற காவலர் தன்னுடன் வருமாறு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் இறங்கி வந்து அப்பெண்ணின் கையைப் பிடித்து தன்னுடன் வருமாறு இழுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண்ணும், அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்ணும் கூச்சலிட்டுள்ளனர். அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் உதவிக்கு வந்தனர்.
அப்போது கையைப் பிடித்து அந்தக் காவலர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் மற்றும் பொதுமக்கள் அவரை செருப்பால் நையப் புடைத்துள்ளனர். மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
இதன்பின் நேற்று காவலர் ராஜீவ் மீது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.