துறையூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துறையூரில் துறையூர் நகர, ஒன்றிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் செய்தனர்.
தி.மு.க.நகர செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மறியலில் தி.மு.க, காங்கிரஸ் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சி யை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.