விவசாயிகளை பாதுகாக்காத பாஜக வை கண்டித்து காங்.ஆர்பாட்டம். விஜய் வசந்த் அறிவிப்பு.
விவசாயிகளை பாதுகாக்காத பாஜக வை கண்டித்து காங்.ஆர்பாட்டம். விஜய் வசந்த் அறிவிப்பு.
காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டி வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர் கலப்பையுடன் பேரணி மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் பிரின்ஸ், விஜயதரணி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட பலரும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் விஜய் வசந்த் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியடித்த போது,
டெல்லியில் விவசாயிகளுடைய போராட்டத்தை ஒடுக்க பாஜக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது?
கடந்த சில நாட்களாக பாஜகவின் கூட்டு வெட்டவெளிச்சமாகி இருக்கின்றது.
விவசாயிகளை பாதுகாக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக பாஜக வேல் யாத்திரை நடத்தி கொண்டிருக்கின்றது, இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று அவர் கூறினார்.