Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிக்பாஸ் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். சீக்ரெட் தகவல்.

பிக்பாஸ் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். சீக்ரெட் தகவல்.

0

 

கம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வெளியான சீக்ரெட் தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்று வரும் பிக்பாஸின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்தியில் 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தியில் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கன்னடா மற்றும் பெங்காலி மொழியில் 2013ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில் முதல் சீசனில் மாடலான ஆரவ் டைட்டிலை கைப்பற்றினார். இரண்டவது சீசனில் ரித்விகாவும் மூன்றாவது சீசனில் முகெனும் வெற்றி பெற்றனர்.

தற்போது நான்காவது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக ஜூன் மாதங்களில் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 50 நாட்களை கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சீசன்களை காட்டிலும் சற்று சுவாரசியம் குறைந்துதான் காணப்படுகிறது

பல எபிசோடுகளில் கண்ணியம் காற்றில் பறந்துவிட்டது. ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது, இழிவுப்படுத்துவது, பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களை அவன் இவன் என்று தரக்குறைவாக பேசுவதும் தொடர்ந்து வருகிறது.

இருந்தபோதும் பிக்பாஸின் நிகழ்ச்சிக்கான வரவேற்பு எதுவும் குறையவில்லை. குறிப்பாக பிக்பாஸ் குரலைக்கேட்டு ரசிக்கவே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகிறது. கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க, நீங்க போகலாம்.. என்ன காரணம்.. என அந்த கம்பீர குரல் ஒலிப்பது ஹவுஸ்மேட்ஸ்களை மட்டுமின்றி ரசிகர்க ளையும் உற்சாகப்படுத்தி வருகிறது. கேபி என செல்லமாக அழைத்து கடந்த சீசன்களில் சாண்டியை சிஷ்யா என்றும், முகேனை முகேன் ஐய்யா என்றழைத்தது, நிகழ்ச்சியின் இறுதி நாளில் முகேனிடம் அன்பு என்றும் அநாதை இல்லை என்று கூறியது போன்ற எல்லாமே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த சீசனில் கேப்பிரியல்லாவை கேபி என்று செல்லமாக அழைத்தும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸ் கம்பீர குரலில் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களை அவ்வப்போது கலாய்ப்பது, பாராட்டுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸின் குரல். குரலை மட்டுமே ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் அந்த குரலுக்கான முகம் இதுவரை வெளிப்படவில்லை. கடந்த சீசனில் பிக்பாஸ் குரலின் சொந்தக்காரரை காண விரும்பிய சாண்டி முகேன் உள்ளிட்ட சிலர் அவரின் போட்டோவை கேட்டனர்.

அப்போது வெறும் நிழலாக தெரியும் போட்டோவை அனுப்பி வைத்தார். அதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் இதற்கு நீங்கள் போட்டோவை அனுப்பாமலே இருந்திருக்கலாம் என்றனர். இருந்த போதும் பிக்பாஸின் அந்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர்.

கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அசத்துவாராம். பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அத்தனை நாட்களும் பிக்பாஸ் வீட்டின் செட்டில்தான் இருப்பாராம் சாஷோ. தனது கம்பீர குரலால் ஹவுஸ்மேட்ஸ்களை மிரட்டும் இந்த சாஷோ எனும் சச்சிதானந்தத்தை கமல் உட்பட செட்டில் உள்ள அனைவருமே பிக்பாஸ் என்று தான் அழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.