தமிழகத்தில் கோவிட் 2 ஆம் சுற்று தெற்று இல்லை. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் கோவிட் 2 ஆம் சுற்று தெற்று இல்லை. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
“கோவிட் தொற்று காலத்தில் சர்வதேச தரத்திலான உயர்தர சிகிச்சையை ராஜீவ் காந்தி மருத்துவமனை வழங்கியுள்ளது. அங்கு இதுவரை 26, 762 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
அக்கு இணைநோய்கள் கொண்ட கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,500 தனி படுக்கை வசதி உடன் புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட நிலையிலும் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றால் குணமடைவோர் விகிதம் 94% ஆக தமிழகத்தில் உள்ளது,
இருப்பினும் கோவிட் தொற்று இல்லை என மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. வரும் டிசம்பர் மாதம் குளிர்காலம் என்பதால் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பண்டிகை மற்றும் பேரிடர் காலங்களுக்கு அளிக்கப்படும் தளர்வுகளும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மிகப்பெரிய சவால். உலகம் முழுவதும் கோவிட் 2ஆம் தொற்று உள்ள நிலையில் தமிழகத்தில் 2ஆம் அலை இல்லை.
புயல் பாதுகாப்புக்காக 16 மாவட்டத்தில் 1.36 லட்சம் பேர் வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு தொற்று ஏதும் உண்டாகவில்லை. சூப்பர் மல்டி ஸ்பேஷாலிட்டி மருத்துவமனைகளில் 50% இட ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் கூறி உள்ள நிலையில் சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தால் அதனை தமிழக மக்களுக்காக பயன்படுத்த முழுமையான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கனவே முதல்வர் கூறி உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைவருமே தொடர்ந்து 3 வாரத்திற்கு முகக்கவசம் அணிந்தால் கொரோனா தொற்றே இருக்காது” எனக் கூறினார்.