திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.
திருநள்ளாறில் சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தக்கால் நடப்பட்டது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். சனி பெயர்ச்சி, சனி பரிகாரம் செய்வது என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோயில்.
இந்நிலையில் புகழ்பெற்ற திருநள்ளாறில் சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தக்கால் நடப்பட்டுள்ளது. பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டார்.
வரும் டிச.27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது,
அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயர்கிறார்.
முன்னதாக சனிப்பெயர்ச்சி நாளில் போது திருநள்ளாறில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். தற்போது கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, சனிப்பெயர்ச்சி விழாவுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஆட்சியர் அர்ஜூன் சர்மா கடந்த 28 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.