ஏரி போல் காட்சி அளிக்கும் பேருந்து நிலையம். உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
ஏரி போல் காட்சி அளிக்கும் பேருந்து நிலையம். உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கனமழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் ஏரி போல காட்சி அளிக்கிறது.
நிவர் புயல் வீரியமாக தாக்கவில்லை என்றாலும் கூட பல்வேறு பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டுதான் சென்று இருக்கிறது.
பலரும் வீடுகளை இழந்துள்ளனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.
இந்நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்து நிலையம் ஏரி போல் காட்சி அளிக்கிறது.இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் சாலை எது, குழி எங்கு இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.