பாஜக நிர்வாகிகள் செருப்பு காலுடன் வேல் யாத்திரை புகைபடத்தால் பரபரப்பு.
பாஜக நிர்வாகிகள் செருப்பு காலுடன் வேல் யாத்திரை புகைபடத்தால் பரபரப்பு.
தமிழக பாஜக நடத்தி வரும் வேல் யாத்திரையில் பாஜக நிர்வாகிகள் சிலர் செருப்புடன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 -ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இருப்பினும் வேல் யாத்திரை தொடர்ந்தது.
இந்த நிலையில், வேல் யாத்திரையில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அவருடன் உள்ள சில தலைவர்கள் ஒரு திண்ணையில் இளைப்பாறுதலுக்காக உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கீழ் அவர்கள் அணிந்து வந்த செருப்பு அப்படியே கிடக்கிறது. செருப்பு அணிந்துக் கொண்டு அவர்கள் அனைவரும் வேல் யாத்திரையில் கலந்து கொள்வது கூட பரவாயில்லை.
ஆனால், இந்த வேல் யாத்திரை நிறைவுற்று, இவர்கள் செல்லும் முருகன் ஆலயங்களில், கோயில் கருவறைக்குள் இந்த வேலை வைத்து பூஜிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பரபரப்பு உண்டான நிலையில், இவர்கள் கொண்டு செல்லும் வேலுக்கு இது தான் மரியாதையா?
யாத்திரைக்கு கொண்டு செல்லும் ‘வேலை’ சுவரோறமாய் வைத்து விட்டு, அருகிலேயே செருப்பையும் கழற்றி விட்டு வைத்துள்ளனர். இந்த வேல் எப்படி இறைவனின் கருவறைக்குள் பூஜைக்காக கொண்டு செல்வார்கள். இதை வேறு யாராவது செய்திருந்தால், இவர்கள் சும்மா இருப்பார்களா என்று கண்டன குரல்கள் எழுகின்றன.