Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்ய இருந்த விமானம் திடீர் ரத்து.

அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்ய இருந்த விமானம் திடீர் ரத்து.

0

சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்ய இருந்த இண்டிகோ விமான பைலைடுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த இரு தினங்களாக நிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் 68 பயணிகளுடன் வந்தது.

பின்பு 8.45 க்கு புறப்பட இருந்த இந்த விமானம் சென்னை புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

அப்போது தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக 58 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.  இந்த நிலையில் சுமார் 42 பயணிகள்  மும்பை மற்றும் டெல்லிக்கு தொடர் பயணம் செய்ய இருந்த காரணத்தினால் ஹைதராபாத் செல்லும் விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதம் இருந்த பயணிகள் மாலை சென்னை நோக்கி செல்லவிருக்கும் விமானத்திற்கு மாற்றுப் பதிவு செய்து கொண்டனர்.

இதனால் பயணிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், இண்டிகோ விமானத்தை இயக்க இருந்த பைலட்டுக்கு திடீரென (நெஞ்சுவலி) உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக உடனடியாக அந்த பைலட் திருச்சியில் உள்ள தனியார் (காவேரி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் காரணமாக தான் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விமானத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தார். அவரும் காலை பயணம் செய்வதற்காக விமான நிலையம் வந்தார்.

விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் அறிந்து மீண்டும் அவர் புதுக்கோட்டைக்கு திரும்பிச் சென்றார்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொள்வதாக இருந்தது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் ஆறாம் இடம் பிடித்ததற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து விருது பெறுவதாக இருந்தது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.