தீபத்தன்று ஏற்றும் விளக்கின் நன்மைகள் குறித்த விளக்கம்
தீபத்தன்று ஏற்றும் விளக்கின் நன்மைகள் குறித்த விளக்கம்
நீங்கள் ஏற்றும் விளக்கின் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் தோஷம் விலகும். எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற தகவல்கள் இதோ உங்களுக்காக
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு – ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
திருவிளக்கின் சிறப்பு திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர் என கூறப்படுகிறது.