இன்றைய ராசிப்பலன் – 28.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மனமகிழ்ச்சி இருக்கும்.வீட்டில் நிம்மதி இருக்கும். உறவினர்களால் நல்ல செய்தி வரும். தொழில் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் வேலையும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக அமையும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் ஆர்வம் சற்று குறைந்தே இருக்கும். தொழில் ஆட்களின் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருட்களில் கவனம் வேண்டும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் மனம் மகிழும் செய்தி இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோக ரீதியில் பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியில் திருப்தி இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்ய நினைப்பீர்கள்.குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.புதிய வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சுபகாரியத் தடை விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் செலவுகள் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர் உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மதிப்பை கொடுக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் சிறிய மந்தநிலை இருக்கும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபம் வரும் சூழ்நிலை இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் உள்ளதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.புதிய முயற்சி செய்யும் வெளி பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
துலாம்
உங்களின் ராசிக்கு தொழிலில் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.சுபகாரியங்கள் அனுகூலப் பலனை கொடுக்கும். கடன்கள் கைக்கு வந்து சேரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். குழந்தைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீட்டில் சுப செலவு இருக்கும். தொழிலில் சிலருக்கு இடமாற்றம் இருக்கும்.உத்தியோகம் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். கடன் தொல்லை தீரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு மனக் குழப்பத்துடன் கவலையுடன் இருப்பீர்கள். எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாகும். உத்யோகத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.வெளியூரில் இருந்து வரவேண்டிய பணம் கைக்கு தாராளமாக வந்து சேரும். சேமிப்பு பணம் உயரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் சில இடையூறு உண்டாகும். நண்பர்களிடம் மனக்கசப்பை இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல்நிலையில் கவனம் வேண்டும். உத்யோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். வீட்டில் ஆதரவு உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் தொடங்க அனுகூலமாக இருக்கும். குழந்தைகளின் உடலில் இருந்த கருத்துவேறுபாடு அகலும். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தோன்றி மறையும். வாகனங்களால் வீண் செலவு இருக்கும். சேமிப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.உற்றார் உறவினர் வழியில் உதவிகள் கிடைக்கும்.