நானும் காந்தி மார்க்கெட் வியாபாரி தான். வெல்லமண்டி பேச்சி, வியாபாரிகள் மகிழ்ச்சி.
நானும் காந்தி மார்க்கெட் வியாபாரி தான். வெல்லமண்டி பேச்சி, வியாபாரிகள் மகிழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழக நிர்வாகக் குழு கூட்டம் இன்று (திங்கள்) மாலையில் திருச்சிராப் பள்ளி மாவட்ட வியாபாரக் கழக அலுவலகத்தில் சுற்றுலாத்துறை வெல்லமண்டி என்.நடராஜன் முன்னிலையில் தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் பேசுகையில் நானும் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரி தான். தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி கள்ளிக்குடி செல்லாமல் காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கே (பழைய இடத்தில்) செயல்பட உறுதுணையாக இருப்பேன், காந்தி மார்க்கெட் விவகாரத்தில் வெற்றி எனக்குத் தான் கிடைக்கும் என அமைச்சர் கூறியதை கேட்ட வியாபார கழக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். ஜங்சன் மேம்பாலம் விடுபட்ட பால வேலை விரைந்து முடிக்க என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன் என கூறினார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் ஜி.ரேன்சன்தாமஸ் ஆரோக்கியராஜ், செயலாளர் எம்.தங்கராஜ், இணைச் செயலாளர் கே.டி.தனபால், பொருளாளர் ப.மகாலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.காளி முத்து, கே.ஏ.சந்திரன், பி.பத்திநாதன், டி. சீத்தாராமன், அ.பாலசுப்பிரமணியன், கே.ராம் பிரகாஷ்.ஜி.எம்.எழில் ஏழுமலை,ஜே.ஆசிர்வாதம், என்.கே.இஸ்மாயில் கான், ப.தாமோதரன் கே.ஸ்ரீனிவாசன், சி.பி. சிங்காரவேல், எல்.எல்.சந்தான கிருஷ்ணன், கே.டி.டி.தங்கவேல், எஸ்.அபுல்கலாம் ஆசாத், எம்.எஸ்.நாகராஜன், கே பால சுப்பிரமணியன், கே.பால கிருஷ்ணன், எம். இளவேந்தன். எ.ஜார்ஜ் ராய்,பி.எம்.கண்ணன், மற்றும் பலரும் இணைச் சங்கங்களை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக்கழக நிர்வாகி கள் மற்றும் பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்ட முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் ஜிஎம் எழில்ஏழுமலை நன்றி கூறினார்.