திருச்சியில் ரூ.11.25 கோடியில் மேலும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
திருச்சியில் ரூ.11.25 கோடியில் மேலும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் :
திருச்சி மாநகராட்சியில் ரூ. 11.25 கோடி
மதிப்பில் புதிய, கழிவு நீர் சுத்திகரிப்பு மையம்.
திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், பஞ்சப்பூர் பகுதியில் மேலும் ஒரு புதிய, கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ. 11.25 கோடி திட்டத்துக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில், புதைவடிகால் திட்டத்தின் கீழ் கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு பகுதிகளில் இப்பணிகள் முற்றுப்பெறவில்லை. மேலும் புதைவடிகால் குழாய்களில் நெகிழிப்பொருட்கள், நாப்கின்கள், உள்ளிட்ட பல்வேறு திடப்பொருட்களும் கொட்டப்படுவதுலா அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதும், பின்னர் சரி செய்யப்படுவதும் தொடர்ந்து வருகின்றது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் புதைவடிகால் திட்டம் மேம்படுத்தப்பட்டு மூன்றாவது கட்டமாக ரூ. 344 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.25 கோடியில், மேலும் ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பஞ்சப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி, ஒப்பந்தம் முடிவு செய்யப்படும்.
இந்த புதிய சுத்திகரிப்பு மையத்தில் நாளொன்றுக்கு 7.5 மில்லியன் டன் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் செயல்படவுள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.