இன்றைய ராசிப்பலன் – 24.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும்
வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் கூடும். வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனை தீரும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.தெய்வ வழிபாடு மனதிற்கு நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு மன அமைதி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். வெளிப் பயணம் மூலம் அனுகூலம் கிட்டும். தொழிலில் சிலருக்கு தகுதிக்கேற்ற உயர்வு உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள்.தொழிலில் வேலைப்பளு இருந்தாலும் பணிபுரிந்தவர்கள் ஒத்துழைத்து சுமையை குறைப்பார்கள். உத்தியோகத்தில் அனுகூல பலன் கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் தடை தாமதம் இருக்கும். காலை 8:52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு காலை 8:32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருக்க வேண்டும். வெளியிடங்களில் தேவை இல்லாத நபர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.
கன்னி
உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆதரவு நன்மையை கொடுக்கும். வெளிப் பயணம் மூலம் அனுகூலம் கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பணவரவு அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீண் மன குழப்பம் இருக்கும். உற்றார் உறவினரிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடு வரும். பணியில் வேலைப்பளு கூடும்.எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும் அதுவே நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீட்டில் பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க கூடும். குழந்தைகளுக்கு அனுகூலம் கிடைக்கும்.பெரிய மனிதர்களின் ஆதரவு புது தெம்பை கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள்.பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். புதிய தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு சோர்வுடன் காணப்படுவார்கள். பணவரவுகளில் ஏற்றம் இறக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க தாமதமாகும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுப முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். தெய்வ வழிபாடு இருக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சீராக இருக்கும். சிவ செய்திகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் ஆல் அனுகூலம் உண்டாகும்.