Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் இன்றைய கிரைம் செய்திகள்…..

திருச்சி மாநகரில் இன்றைய கிரைம் செய்திகள்.....

0

திருச்சி தனியார் வங்கியில் ரூ 1.45 கோடி மோசடி.
நிதி நிறுவன மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு.

திருவரங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் பல தொழில்களை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. அந்த இடத்தை அடமானமாக வைத்து திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஒரு கோடியே 85 லட்சம் கடனாகப் பெற்றார்.

இரண்டு வருடங்கள் தவணை முறையில் பணத்தை கட்டினார் பின்னர் கட்ட முடியாததால் அந்த இடம் ஏலத்துக்கு வந்தது அதை திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏலம் எடுத்து.

அந்த இடத்துக்கு ஒரு கோடியே 45 லட்சத்து செலுத்தியது பின்னர் உள்ள பணத்தை இடத்துக்கான ராஜாமுகமது நிதி நிறுவனத்திற்கு கட்ட வேண்டும் ஆனால் அவர் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில் அந்த பணத்தை அவரை கட்ட வைத்து இடத்து ஆவணங்களை உரிமையாளரிடம் தனியார் நிதி நிறுவனம் ஒப்படைத்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒரு கோடியே 45 லட்சம் தொகையாக தனியார் நிதி நிறுவனத்திற்கு செலுத்திய திருச்சி தனியார் வங்கி இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது.
புகாரை தனியார் வங்கி உதவி மேலாளர் மணிகண்டன் அளித்தார்.

புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் திருவரங்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா முகமது அவரது மனைவி நூர்ஜகான் தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

 

2. திருச்சி பீம நகரில் துணிகரம்
பெண் காய்கறி வியாபாரியிடம் பட்டப்பகலில் பணம் கொள்ளை நூதன முறையில் திருடிய ஆசாமி கைது

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் இவரது மனைவி ஜெயமேரி (வயது 43)
இவர் வேன் மூலம் மாநகரின் பல இடங்களில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் நேற்று திருச்சி பீமநகர் ஆனைகட்டி மைதானம் பகுதியில் வேன் மூலமாக காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு காய்கறி ஆர்டர் கொடுக்க வேண்டும் எனக் கூறி ஜெயமேரி யிடம் பேச்சுக் கொடுத்தார் விவரங்களை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கும் போது ரூ.2000 பணத்திற்கு சில்லரை கேட்டார் அவர் சில்லரை கொடுத்தார் கொடுத்தவுடன் எதிர் கடையில் இருக்கும் தனது மகளிடம் பணத்தை கொடுக்குமாறு ஜெயமேரியிடம் அந்த நபர் கூறினார் ஜெயமேரி பணத்தை எதிர் கடைக்கு கொண்டு செல்வதற்குள் கடையில் கைப்பையில் வைத்திருந்த 30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஜெயமேரி செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிந்து நூதன முறையில் திருடிய மர்ம ஆசாமியை கைது செய்தார் விசாரணையில் அவர் திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது அவரிடம் பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.