Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வரும் திமுக மா.செ.வை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வரும் திமுக மா.செ.வை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

தொடர்ந்து பெண்களை இழிவாக பேசிவரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து

திருச்சியில் அதிமுகவினர் கருப்பு நிற முகக்கவசம் அணிந்து கண்டன போராட்டம்.

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், பெண்களைக் குறித்து இழிவாக பேசிய ஆடியோ ஒளிப்பதிவு வெளியாகி, அவர் மீது ஆறு பிரிவின்கீழ் வழக்கு பதிந்துள்ள நிலையில், மீண்டும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இழிவாக பேசும் ஆடியோ வெளியாகி திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் காடுவெட்டி தியாகராஜன்.

முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது திமுகவினர் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில்தான், சோழிய வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த திமுக திருச்சி. வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் மீது இரு சமூகத்தினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல், பொது அமைதியை சீர்குலைத்தல், சமூகத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவின்கீழ் காட்டுப்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, தெற்கு மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர் கடந்த இரண்டு தினங்களாக திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராகவும், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்களையும் காவல்துறையினரையும் விவாக பேசிய ஆடியோ வெளிவந்தது,

இதன் தொடர்ச்சியாக நேற்று புதிதாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சொல்ல நா கூசும் வார்த்தைகளால் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பேசிவரும் திமுகவையும், மத, ஜாதி அரசியலை கையிலெடுத்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பெண்கள் விரோத பேச்சை கண்டித்து அதிமுக சார்பில் கறுப்பு நிற முக கவசம் அணிந்து திருச்சியில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ராஜ்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் கே.சி. பரமசிவம். மாவட்ட பொருளாளர் ஐயப்பன் ,மாவட்ட துணை செயலாளர்கள் அருள் ஜோதி, ஜாக்குலின், இளைஞரணி பத்மநாதன், மகளிர் அணி தமிழரசி சுப்பையா வெல்லமண்டி பெருமாள், ஏ.எம்.மீரான்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி,
நாகநாதர் பாண்டி, கருமண்டபம் ஞானசேகர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, முன்னாள் கோட்டத் தலைவர் மனோகர், ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார், ஐ.டி.அணி தாயார் ஸ்ரீனிவாசன், கருமண்டபம் நடராஜன், காசிப்பாளையம் சுரேஷ், கே.டி.அன்புரோஸ், என்.டி.மலையப்பன், டாக்டர் சுப்பையா, அஸ்வினி மோகன், பேச்சாளர்கள் ஆர், பொம்மாசி பாலமுத்து, சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, வனிதா, நத்தர்ஷா, வக்கீல்கள் ஜெயராமன், சுரேஷ், அரப்ஷா தர்கா காஜா, சந்திரன், கட் பீஸ் ரமேஷ், பாபு, மகாலெட்சுமி மலையப்பன், அக்தர் பெருமாள், செல்வமணி, பொன். அகிலாண்டம், மகேந்திரன், செந்தண்ணீர்புரம் கணேசன், ஒத்தக்கடை மகேந்திரன், சிங்கமுத்து மூங்கில் கடை ராமசாமி, மணிகண்டன், காஜாப்பேட்டை சரவணன், சாத்தனூர் சதீஷ்,செயலாளர், டிபன் கடை கார்த்திகேயன், ஜெகதீசன், வைத்தியநாதன், கண்ணியப்பன், கதிர்வேல், தென்னூர் அப்பாஸ் .நவசக்தி சண்முகம், செங்கல் மனி சரவணன், ஜெரால்டு, நடராஜன், வேலுப்பிள்ளை, மல்லிகா செல்வராஜ், சந்து கடை சந்துரு,
கே.டி.ஏ.ஆனந்தராஜ், கே.சி.மோகன், கமல்ஹாசன், சந்திரசேகர், பிரகதீஷ், ஆட்டோ ரஜினி, வண்ணாரப்பேட்டை ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.