Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 30ந் தேதி இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.

0

2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 30 அன்று நிகழும்.

இந்த ஆண்டு, கார்த்திகை மாதம் பௌர்ணமியில், அதாவது நவம்பர் 30, திங்களன்று ‘உபச்சயா’ சந்திர கிரகணம் நிகழும்.
நவம்பர் 30 நிகழவிருக்கும் கிரகணத்தின் நேர குறிப்புகள்:

கிரகணம் தொடக்க நேரம்: நவம்பர் 30 மதியம் 1:04 மணிக்கு.
கிரகணம் இடைக்காலம்: நவம்பர் 30 பிற்பகல் 3:13 மணிக்கு.
கிரகணம் முடியும் நேரம்: நவம்பர் 30 மாலை 5:22 மணிக்கு.

சந்திர கிரகணத்தின் விளைவு:

ஜோதிடர்களின் கூற்றுப்படி, நவம்பர் 30 ஆம் தேதி சந்திர கிரகணம் (Lunar Eclipse) 2020 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாக இருக்கும்.
ஜோதிடர்கள், இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ரிஷப ராசி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். எனினும், கிட்டத்தட்ட அனைத்து ராசி அறிகுறிகளிலும் இந்த கிரகணம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு கிரகணத்திற்கும் (Eclipse) ஒரு உச்ச காலம் உள்ளது. இந்த காலத்தில் கடவுளை வணங்கி, மந்திரங்களை உச்சரிக்கவும் தியானம் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது.

நவம்பர் 30 ஆம் தேதி வரவிருக்கும் சந்திர கிரகணத்தில், இந்த உச்சி காலத்திற்கு அத்தனை வீரியம் இருக்காது. இந்த கிரகணம் ஒரு ‘உபச்சயா’ கிரகணம் என்பதால் அப்படி சொல்லப்படுகின்றது.

‘உபச்சயா’ கிரகணம் என்றால் என்ன
சந்திர கிரகணங்களை கண்களால் பார்க்கக்கூடாது என்று பரவலாக நம்பப்படுகிறது. இப்படி வழிவழியாகக் கூறப்படுகின்றதே தவிர, இதற்கு எந்த மத முக்கியத்துவமும் இல்லை.

சில வீரியம் இல்லாத கிரகணங்கள் பஞ்சாங்கத்தில் சேர்க்கப்படுவதில்லை.
நவம்பர் 30 ஆம் தெதி நிகழவிருக்கும் சந்திர கிரகணம் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆசியாவில் தெரியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக கிரகண நேரத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு செயல்முறைகள் அனுசரிக்கப்படுகின்றன. கிரகண காலத்தில், நேரடியாக சந்திரனையோ சூரியனையோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகின்றது.

இது
விஞ்ஞானமும் ஜோதிடமும் வான்வெளி சாஸ்திரமும் கலந்த நிகழ்வாக இருப்பதால், கிரகணங்கள் மீது பொதுவாகவே மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.