திருச்சி சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா.
திருச்சி சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா.
தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருச்சி ஜங்ஷனில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுஸ்தூபியில் மலர் தூவி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .
மாநில நிர்வாகிகள் அறிமுகம் , அடையாள அட்டை வழங்கும் விழா மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், துணைத் தலைவர் முனுசாமி, மதுரை மாவட்டத் தலைவர் கருப்பையா, திருச்சி மாவட்ட தலைவர் அரவானூர் சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு நேரு யுவகேந்திரா இளையோர் மன்ற அதிகாரி சுப்ரமணி வாழ்த்துரை வழங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் ஜெஸ்டின் ராஜா, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கே.வி.ராமன், ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ் நன்றி
கூறினார்.