தனியார் பள்ளிகளின் பிரச்சனைகளை
ஜனநாயக முறையில் தீர்வுகான விரைவில் புதிய அமைப்பு
திருச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் பேட்டி.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் சங்க துணைப்பொதுச் செயலாளர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தில் உள்ள 12ஆயிரம் பள்ளிகளை சேர்ந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு சங்க உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். முன்னணி தலைவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வந்த சங்கம் தற்போது, தலைமை தன்னிச்சையாக செயல்படும் நிலை உள்ளது. மேலும் சங்கம் அரசுக்கு எதிரானவை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி, பல்வேறு பள்ளிப்பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காணாமல் தானகவே பிரச்சகைளை தீர்த்துக்கொள்ளட்டும் என்ற நிலையும் உள்ளது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சங்கத்தின் வரவு,செலவு கணக்குகள் காட்டப்படவில்லை. மாநில பொறுப்புகளில் ஒரே பதவிக்கு 4பேரை நியமிக்கும் நிலை உள்ளது. தலைமைக்கு இணக்காமாக இல்லாவிட்டால் எவ்வித அறிவிப்பும், விசாரணையும் இல்லாமல் பதவி மாற்றப்படுகிறது. தலைமையின் ஜனநாயகமற்ற இந்த செயல்களால் அச்சங்கத்தில் இருந்து 90 சதவீதம் பேர் வெளியேறி உள்ளோம். நாங்கள் பள்ளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தொடர்புடையவர்களுடன் பேசியும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் மூலமும், ஜனநாயக முறையில் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதிய அமைப்பை உருவாக்க உள்ளோம். விரைவில் புதிய அமைப்பின் பெயர் மற்றும் நிர்வாகிகளின் பெயரை வெளியிட உள்ளோம் என்றார்.
பேட்டியின் போது மாநில பெற்றோர், ஆசிரியர் கழக மாநில தலைவர் நிர்மலா கா.சந்திரசேகர், திருச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ராஜசேகரன், வேணுகுமார், மதுரை ராஜா, பெரம்பலூர் மாணிக்கம், சிவகங்கை செல்வின் அன்பரசு, பெரம்பலூர் பழனிவேல், சேலம் சக்திவேல், திருவாரூர் ஷா, தஞ்சாவூர் பாஸ்கர், கடலூர் அன்புகுமரன் உள்பட பலர் உடனிருந்தனர்.