திமுகவில் ஸ்டாலினுக்கே ஷாக் கொடுக்கும் இரண்டு தலைவர்கள்
திமுகவில் ஸ்டாலினுக்கே ஷாக் கொடுக்கும் இரண்டு தலைவர்கள்
யார் “அந்த” 2 பேர்.. ஸ்டாலினுக்கே ஷாக் கொடுத்த தலைவர்கள்.. மண்டை காய்ந்து போன திமுக!
மண்டை காய்ந்து போயுள்ளதாம்… அந்த அளவுக்கு அக்கட்சி தலைவரிடம் அந்த 2 பேர் குறித்து புகார் மேல் புகார் போயுள்ளதாம்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் சமீப காலமாகவே தேர்தல் சம்பந்தமான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.. அதன் ஒருபகுதியாக, மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக கூப்பிட்டு பேசுகிறார்.. அவர்களிடம் தொகுதி நிலவரங்கள், பிரச்சனைகள், மாற்றங்கள் என அனைவற்றையும் கேட்டறிகிறார்.
அந்த வகையில்தான் மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசும்போது, பெரும்பாலானோர் தங்கள் குறைகளை புலம்பி தள்ளி விட்டனர்.. அவர்கள் அனைவரும் திரண்டு சொன்னது கட்சியின் இளைரணி செயல்பாடு மீதுதான்!
கொஞ்ச நாளாகவே இளைஞரணியினர் தங்களை மதிப்பதில்லை, எல்லைமீறி நடந்து கொள்வதாக ஸ்டாலினிடம் சொல்லி உள்ளனர்.. இவர்கள் மட்டும் தனி ராஜாங்கம் போல செயல்படுவதாகவும், சீனியர்களான தங்களை எதிலுமே கலந்தாலோசிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.. முக்கியமாக திருச்சி, தஞ்சையில் இளைஞரணியின் நடவடிக்கைகள் உச்சக்கட்ட அராஜகத்துக்கு சென்று வருவதாக சொல்லவும், இதை கேட்டு ஸ்டாலின் அதிர்ந்து விட்டாராம்.
அதுமட்டுமல்ல, இவர்கள் வசூல் வேட்டையில் இறங்கி வருகிறார்களாம்.. வரப்போகிற தேர்தலில் எம்எல்ஏ வாங்கி தருகிறோம் என்று சொல்லி அவரவர் தொகுதிகளில் இளைஞர் அணி சார்பாக பணம் வசூலித்து வருவதாக சொல்லவும், ஸ்டாலின் மேலும் அதிர்ச்சி அடைந்தாராம்.. தங்களை தனியாக ஒதுக்கி வைத்து, இளைஞர் அணி மட்டும் செயல்படுவது நாளைக்கு தேர்தல் சமயத்தில் பிரச்சனையாகும் என்றும் மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினிடம் சொல்லி உள்ளனர்.
இப்படி கொங்கு மண்டலம், டெல்டா மண்டலம் என இரு மண்டலங்களிலும் உள்ள இளைஞரணி குறித்துதான் ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. அத்துடன் இதில் 2 பேர் மிக முக்கியமானவர்களாம்.. அவர்கள் உதயநிதியின் வலது, இடது போன்று செயல்பட்டு வருபவர்கள்… அவர்கள் 2 பேர்தான் இதற்கெல்லாம் காரணம், அவர்கள் இருவரும் அமைச்சர்களாக வருவோம் என்றே ஊருக்குள் சொல்லி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படி அந்த குறிப்பிட்ட 2 பேர் பற்றியே அதிக புகார்கள் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் 2 பேர் யார்? சொல்லப்பட்டுள்ள புகார்கள் உண்மைதானா என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளாராம்.. அவர்கள் 2பேரின் நடவடிக்கையையும் கண்காணிக்குமாறும் தெரிவித்துள்ளாராம்.
இதனிடையே, தஙகளை போட்டுக் கொடுத்த அந்த மாவட்ட செயலாளர்கள் யார் என்று அந்த 2 பேரும் முயன்று வருகிறார்களாம்.. ஆக, கட்சிக்குள் மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி என்று இருதரப்பும் மறைமுக மோதலில் உள்ளதாக தெரிகிறது. 10 வருஷம் கழித்து ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிச்சயம் இந்த பிரச்சனையையும் விரைவில் களைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.