அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி பணியாளர்கள் உள்பட தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் 10% தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழக அரசு போனஸ் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி பணியாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும்.
ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ. 210 கோடியே 48 லட்சம் ஒதுக்கி உள்ளது தமிழக அரசு .
முன்னதாக போக்குவரத்து, மின்சாரம் என மாநில பொதுத்துறை நிறுவனங்கள், வாரிய ஊழியர்களுக்கு 8.33% போனஸ்+11.67% கருணைத் தொகை என 20% தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் நிதிச்சுமை கருத்தில் கொண்டு 10% சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துளளது. நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவார்கள்.