இன்றைய ராசி பலன்கள் நவம்பர் 03, 2020 ஐப்பசி 18 – செவ்வாய்
இன்றைய ராசி பலன்கள் நவம்பர் 03, 2020 ஐப்பசி 18 - செவ்வாய்
மேஷம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். விவாதங்களின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : உறவு மேம்படும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
உடன்பிறப்புகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும்.
கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உடல் தோற்றப் பொலிவில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : விரயங்கள் ஏற்படும்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
மிதுனம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. தொழில் தொடர்பான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அமைதியுடன் செயல்படவும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
கடகம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாளுவதன் மூலம் இலாபம் அடைவீர்கள். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.
சிம்மம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
கன்னி
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல்திட்டம் தீட்டுவீர்கள். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : செயல்திட்டம் தீட்டுவீர்கள்.
துலாம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருப்பது அவசியம். தேவையற்ற பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
விருச்சகம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
வெளிவட்டார தொடர்புகளின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை பற்றிய எண்ணங்களும், சிந்தனைகளும் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : தடைகள் நீங்கும்.
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
தனுசு
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். சுரங்கம் சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மூலம் : விரயங்கள் ஏற்படலாம்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
மகரம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
கும்பம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
உறவினர்களின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். எதிர்பாராத புதிய பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் சில மனப்போராட்டங்களுக்கு பின்பு நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : சுபச்செலவுகள் ஏற்படும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.
மீனம்
நவம்பர் 03, 2020
ஐப்பசி 18 – செவ்வாய்
நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் எண்ணிய வெற்றி கிடைக்கும். எதையும் சமாளிக்கும் திறமைகள் மேம்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : ஈடுபாடு அதிகரிக்கும்.