திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்க நடவடிக்கை.
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்க நடவடிக்கை.
*திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்க நடவடிக்கை*
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவில் கூடுதல் அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 ஆயிரம் டோக்கன் வழங்கப்படும் என்றார்.
இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வழங்க ஆலோசிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்தை ரத்து செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.