Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிவா MP யின் மகன் சூரியா குடிபோதையில் ரகளை. போலீசார் விசாரணை.

திருச்சி சிவா MP யின் மகன் சூரியா குடிபோதையில் ரகளை. போலீசார் விசாரணை.

0

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா தனது நண்பரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக நான்கு நண்பர்களோடு நேற்றிரவு சென்னை அண்ணா சாலையிலுள்ள பார்க் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அங்கு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிவிட்டு மதுபோதையில் நட்சத்திர விடுதியின் வாசலில் நண்பர்களோடு பேசிக்கொண்டுந்தபோது, தனது முன்னாள் நண்பரான பஜாஜ் நிறுவனத்தின் மண்டல மேலாளராக உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரைப் பார்த்துள்ளார்.

பின்னர், அவரிடம் பேசிவிட்டு 4 பீர் ஆர்டர் செய்யும்படி எம்.பி சிவாவின் மகன் சூர்யா கேட்டுள்ளார். ஸ்ரீராமும் 4 பீர்களை ஆர்டர் செய்து பில் கொடுப்பதற்காக ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார்.
ஆனால், சிக்னல் இல்லாததால் அதிலிருந்து பார்க் ஹோட்டல் ஊழியரால் பணத்தை எடுக்கமுடியவில்லை. இதனால் ஊழியர் பணத்தை எடுக்க முடியவில்லை எனக்கூற, சூர்யாவும் அவரது நண்பர்களும் பணம் இல்லாத கார்டை கொடுத்து எங்களை நக்கல் செய்கிறாயா என ஸ்ரீராமிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனால் ஸ்ரீராமுக்கும், சூர்யா மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதில் ஸ்ரீராமை தாக்குவதற்காக சூர்யாவும் அவரது நண்பர்களும் பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு துரத்த, ஸ்ரீராம் ஹோட்டலுக்குள் சென்று 100-க்கு கால் செய்துள்ளார்.
மேலும், சூர்யா அவரது காரை ஹோட்டலின் முன் நிறுத்தி யாரும் உள்ளேயும் வெளியேயும் செல்லாதபடி தகராறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பீர்வாங்கி கொடுக்காததால் தன்னைக் கொலை செய்யும் நோக்கோடு பீர் பாட்டிலைக் கொண்டு தாக்க முற்பட்டதாக ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.

மேலும், பிரச்னையின்போது ஸ்ரீராம் காரிலிருந்து கத்தியை எடுத்து வந்து தன்னையும் தன் நண்பர்களையும் தாக்க வந்தார் என சூர்யா எதிர் புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.