Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரஜினியை திடீரென சந்தித்த குருமூர்த்தி, பரபரப்பும் மீட்டிங்

ரஜினியை திடீரென சந்தித்த குருமூர்த்தி, பரபரப்பும் மீட்டிங்

0

 

*சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை திடீரென சந்தித்த குருமூர்த்தி.. 2 மணி நேரதிற்கு மேலாக பரபர மீட்டிங்* !

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி நேரில் சந்தித்து பேசினார். ரஜினியுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக அரசியல் நிலைப்பாடு, உடல் நலம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அண்மையில் போலியான கடிதம் வெளியானது. அந்த கடிதத்தில் “மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
ஆனால் இப்போது வந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க இயலவில்லை. 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக பாதிப்பும், 2016-ல் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
மருத்துவர்கள் அறிவுரை

எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு ‘தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்’ என்பதாக கடிதம் இருந்தது.

இதற்கு பதில்அளித்த ரஜினி காந்த் கடிதம் போலி என்றாலும் கடிதத்தில் உள்ள மருத்துவர்கள் சொன்ன தகவல் உண்மை என்றார்.

இதுபற்றி ரஜினி தனது ட்விட்டரில், ‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்’ என்றார்.

 

ரஜினி இப்படி தகவல் வெளியிட்டதில் இருந்து உடல்நலம், அரசியல் சூழல், அரசியல் செயல்திட்டம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினியின் ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வர சொல்லி, நூதன வகையில் போராடி வருகிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்ற கூறப்படுகிறது. அதை மறைமுகமாக உணர்த்தவே இப்படி ஒரு அறிவிப்பை ரஜினி வெளியிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.,

இந்நிலையில் ரஜினியை சந்தித்த குருமூர்த்தி,

வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு ரஜினி அரசியலுக்கு வருவதில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றம் வரும் என்று கூறிவந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று திடீரென சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். அப்போது ரஜினியின் உடல் நலம், அரசியல் சூழல்கள், அரசியல் செயல்திட்டங்கள் குறித்து இருவரும் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் தீவிர ஆதரவாளரான குருமூர்த்தி ரஜினியை நேரில் சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.