கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 200 கிலோ போலி தேயிலைத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூரிலிருந்து விருத்தாசலத்திற்கு வந்த ஒரு தனியார் பேருந்தில் சுமார் 200 கிலோ போலி தேயிலைத்தூளை இறக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக காவல்துறையினர் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் விருத்தாசலம் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி , மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் ஆகியோர் அறிவுரையின் படி, மேற்கண்ட தேயிலை தூளை உடனடி ஆய்வு செய்து பார்த்ததில் செயற்கை சாயம் சேர்க்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 200 கிலோ தேயிலை தூள் கொண்ட நான்கு மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட தேயிலை தூள்களில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த தேயிலை தூளை கொண்டு வந்த நபர் பெயர் முகவரி முழுமையாக இல்லை எனவே அதனை கொண்டு வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.