அதிகாரிகள் திடீர் ஆய்வில் 100 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் 100 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
தர்மபுரியில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலையில் அதிகாரிகள் தீடீர் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி பகுதியில் செயல்படும் வெல்லம் தயாரிப்பு கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 100 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் திடீர் ஆய்வு ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி அடுத்த கடகத்தூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு கரும்பு ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் மற்றும் நாட்டு சக்கரை ஆகியவற்றில் வேதிப்பொருட்கள் செய்யப்படுகிறதா? ஏதேனும் தரமற்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி மற்றும் அலுவலர்கள் கடகத்தூர் பதிவு செயல்படும் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு கரும்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரு ஆலையில் வெள்ளத்தி ஏதேனும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறதா என்றும், வெள்ளத்தில் கலப்படம் செய்யப் படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஒரு ஆலையில் வேதிப்பொருட்கள் கலந்த 100 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு ஆலையில் வெல்லம் தயாரிப்பதற்கு வேதிப்பொருட்கள் மற்றும் மைதா பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.