*திருமாவளவனை கைது செய்ய காரைக்காலில் பாஜகவினர் போராட்டம்!*
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டிருந்த ஆடியோவில் இந்து பெண்களை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு பாஜக தலைவர்கள் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இது தொர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். அப்போது, திருவமாவளனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
காரைக்கால் பாஜக மாவட்ட தலைவர் துரை .சேனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருமாவளவனை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு நிற்காமல், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்