பாஜகவில் தமிழ் திரைப்பட பிரபல நடிகர், நடிகைகள் இணைய உள்ளனர் ?
பாஜகவில் தமிழ் திரைப்பட பிரபல நடிகர், நடிகைகள் இணைய உள்ளனர் ?
*பாஜகவில் நடிகர் விஷால் மற்றும் சரத்குமார், ராதிகா ஐக்கியமா ?*
தமிழக பாஜகவில் பிரபல நடிகர் விஷால் மற்றும் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமராக மோடி பெற்ற பின்னர், நாடும், பாஜகவும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.
மோடிக்கு துணையாக அமித் ஷாவும் களம் இறங்கியதால், நாடு முழுவதும் பாஜக அலை பரவியது.
இதனையடுத்து, தென்மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தில் அண்மை காலமாக பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட, நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு, பாஜகவில் ஐக்கியமானார்.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் சங்க தலைவரான விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார் நடத்தி வருகிறார். இந்த கட்சிக்கு தென்மாவட்டங்களில் ஒரளவு செல்வாக்கு உண்டு. இந்த நிலையில், சரத்குமார் தனது கட்சியை பிஜேபியோடு இணைக்க விரும்புவதாகவும், அவரும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. அவருடன் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் இணைய உள்ளாராம்.
பாஜகவில் முக்கிய பிரபலங்கள் பலர் தொடர்ந்து இணைந்து வருவதால், தமிழகத்தில் எதிர்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன