விஜய் அரசியல் ஆயத்தமா ? திருச்சி மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை.
விஜய் அரசியல் ஆயத்தமா ? திருச்சி மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை.
*அரசியல் ஆயத்தமா? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை*
விஜய் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் விஜய்.
பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
சென்னை அருகே உள்ள பனையூரில், மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் விஜய். அதோடு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தமிழகத்தில் 2021 சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,
ஆர் கே ராஜா உள்ளிட்ட திருச்சி தெற்கு, திருச்சி மேற்கு மற்றும் மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய்.
இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் நிர்வாகிகள் மூலம் நிறைய நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.