திருச்சியில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பேச உள்ளார். இதற்காக திருச்சி மாவட்டத்தில் சுமார் 1200 இடங்களில் காணொளி திரை அமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஏற்பாடுகளை ஆய்வு செய்த, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறுகையில்.. ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் இந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் சுமார் 900 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சியின் மூன்று மாவட்ட செயலாளரான காடுவெட்டி தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, வைரமணி ஆகியோர் செய்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கேட்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்