அதிமுக 49வது ஆண்டு விழா.அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.
அதிமுக 49வது ஆண்டு விழா.அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.
திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர்
வெல்லமண்டி ந. நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சரின் செய்தி அறிக்கை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 49-வது
ஆண்டு விழா
கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஒபண்ணிர் செல்வம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதலமைச்சர், எடப்பாடி K. பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க
49வது ஆண்டு கழக தொடக்க நாள் 17.10.2020 சனிக்கிழமை அன்று ஆங்காங்கே அமைந்துள்ள கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவ சிலைக்கும் அல்லது படங்களுக்கும் மாலை அணிவித்து கழக கொடி கம்பங்களுக்கு புது வண்ணம் தீட்டி கழக கொடியினை ஏற்று வைத்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கொள்கிறேன் கேட்டுக் கொள்கிறேன்.
அது சமயம் காலை 10 மணியளவில் திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு
வழங்கப்படும்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் Ex.கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள். முன்னாள் தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவண் :
அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் திருச்சி மாநகர் மாவட்டம்