இல்லாத விசயத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.ஜி.கே. வாசன் திருச்சியில் பேட்டி
இல்லாத விசயத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.ஜி.கே. வாசன் திருச்சியில் பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி அம்மா மண்டபம் அருகே உள்ள தனியார் மஹாலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜிகே வாசன் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா, துவார் ரங்கராஜன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்;-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவராக இருந்த புலியூர் நாகராஜன் மறைவிற்கு மிகப்பெரிய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே அவரின் இழப்பு மிகவும் வருத்தமடைய செய்துள்ளது . அவருக்கு காய்ச்சல் வருவதற்கு முன்னதாக கூட விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்வதற்காக திருச்சிக்கு வந்த தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். ஆனால் அவர் இப்போது இல்லை என்று நினைக்கின்ற போது மன வேதனை அடைகிறது.
மேலும் இன்று அவரின் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 3 லட்சம் ஆறுதல் தொகை வழங்கப்படுகிறது. அவர் தொடர்ந்து காமராஜர், ஜி. கே.மூப்பனார் ஆகியோரின் வழிமுறைகளை பின்பற்றி நடந்தவர். அந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு குறைந்த அளவே நிர்வாகிகள் வந்துள்ளனர். நாட்டின்
விவசாயிகளின் வருமானத்தை மனதில் கொண்டு அரசு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும் பயிர் காப்பீட்டு
தொகையை உறுதிப்படுத்தி விவசாயிகளுக்கு உறுதி கொடுக்க வேண்டும். அதை தொடர்ந்து திருச்சியில் இருந்து கடலூர் வரைக்கும் ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் அவ்வாறு அமைத்தால் அதன் மூலம் கூலித் தொழிலாளிகள் அதிகமானோர் பயனடைவார்கள்.
மணப்பாறை பாரதி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மணப்பாறை நகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தலை சந்திக்கிறது மேலும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி யுடன் ஒப்படைத்து முதலமைச்சர் வேட்பாளராக முடிவு செய்து அறிவித்துள்ளார். தொடர்ந்து ஆறு மாதமாக கோவிட் 19 என்னும் கொடிய வைரஸ் தமிழகத்தில் உடைக்கின்றது. வளர்ந்த நாடுகளை கூட இது விட்டு வைக்கவில்லை. மேலும் நோய் பாதிப்பு தற்போது தமிழகத்தில் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடமும் விழிப்புணர்வு முற்றிலும் குறைந்து உள்ளது. இதனால் மீண்டும் நோய் பரவலுக்கு ஒரு வழியை மக்களை உருவாக்கி விடக் கூடும் என்னும் அபாயம் இருக்கிறது.அதனால் மக்கள் கவனமாக சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து கொரோனோ நோயை முற்றிலும் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு ஏதுவான சட்ட மசோதாவை எதிர்க் கட்சிகள் சார்பாக பொய்யான தகவல்களை பரப்பி ஆபத்தான நிலையை இந்த மசோதா உருவாக்கிவிடும் என்ற நிலையை விவசாயிகளின் மத்தியில் உருவாக்கி வருகின்றனர் நேரடியாக அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளிடையே நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்க வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லை வைப்பதற்கு இடம் இல்லை என்றால் அதற்கும் அரசு வழிவகை செய்து கொடுக்கவேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிக பூ உற்பத்தி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள பூக்களின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது அதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும். திருச்சி பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரங்கள் இல்லாத நிலையில் உள்ளது அதற்கும் அரசு விவசாயிகளுக்கு ஒரு நல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதனை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு த.மா.க. முற்றிலும் உறுதுணையாக இருக்கும்.
சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு இல்லாத ஒரு விஷயத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.